திண்டுக்கல்: போலி சான்றிழதழ் கொடுத்து.. மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி

1395பார்த்தது
திண்டுக்கல்: போலி சான்றிழதழ் கொடுத்து.. மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி
திண்டுக்கல், பழனியைச் சேர்ந்த காருண்யா ஸ்ரீவர்ஷினி(19) என்ற மாணவி, 2025 நீட் தேர்வில் 456 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இது போலியானது என கண்டறியப்பட்டதை அடுத்து, மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி மற்றும் அவரது பெற்றோர் சொக்கநாதன்(55), விஜய முருகேஸ்வரி(47) ஆகியோர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த கும்பலுக்கு ரூ. 25ஆயிரம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி