கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடக்கம்

440பார்த்தது
கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடக்கம்
திருநீற்றுப் புதன், சாம்பல் புதன் அல்லது விபூதிப் புதன் என அழைக்கப்படும் இந்த நாள், நாற்பது நாட்கள் நீடிக்கும் தவக் காலத்தின் முதல் நாளாகும். இன்று தொடங்கியுள்ள இந்த தவக்காலம், ஈஸ்டர் பண்டிகைக்கு முன் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் நோன்பு மற்றும் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி