திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமாட்சிபுரம், அகரம், கிரியாம்பட்டி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சரவணன் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு வழங்கினார். இந்தப் பணி 04.11.2025 அன்று தொடங்கி 04.12.2025 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நடைபெறும். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் வினோதினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.