திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக வசந்த விழாவையொட்டி, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பத்மகிரீஸ்வரர், பிரியாவிடை தாயார், அபிராமி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக கந்தகோட்டம் முருகன் கோவிலில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.