திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.