திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியில் திமுக, பிற கட்சிகளைச் சேர்ந்த சுமார் 250 லோடு மேன்கள் அதிமுகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "கருப்பு பணம் விஜய் வாங்குவது உண்மை. நான் நேர்மையானவன் ஊழல்வாதி இல்லை என்று பதில் சொன்னால் தானே தெரியும். எல்லாமே வெள்ளை பணம் தான் வாங்குகிறேன் என் சம்பளம் இவ்வளவு தான் என சொல்ல முடியுமா?" என்று பேட்டியளித்தார்.