மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் சேர்க்காத மத்திய அரசின் மக்கள் நலன் புறக்கணிப்பு நிதிநிலை அறிக்கையை எதிர்த்து, தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பிப்ரவரி 12-ம் தேதி பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும். இது குறித்து விளக்கி பேகம்பூரில் இருந்து நடைப்பயண பிரச்சாரம் துவங்கியது.