திண்டுக்கல் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது திருச்செந்தூரிலிருந்து பழனி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.