திண்டுக்கல் பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தச்சு தொழிலாளி ராமகிருஷ்ணன் வீட்டில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ₹80 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து 2 சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.