தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி முடித்த மாணவர்களுக்கான அரசு தொழில்நுட்ப தேர்வுகள் நேற்று தொடங்கின. இதன் முதற்கட்ட தேர்வுகள் திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் சிறப்பாக நடைபெற்றன. இத்தேர்வை சுமார் 4,000 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தட்டச்சு தேர்வு தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.