வடமதுரை: டீக்கடைக்குள் வேன் புகுந்து மூதாட்டி பலி

362பார்த்தது
வடமதுரை: டீக்கடைக்குள் வேன் புகுந்து மூதாட்டி பலி
வடமதுரை அருகே, பாகாநத்தம் ஒத்தப்பட்டியில் நேற்று (மே 6) மதியம் சரக்கு வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர டீக்கடைக்குள் புகுந்ததில், 82 வயது மூதாட்டி மருதாயம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையில் அமர்ந்திருந்த 65 வயது திருமக்காள் மற்றும் பால் வியாபாரி 35 வயது வேல்முருகன் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரியோடு இன்ஸ்பெக்டர் மலையரசி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி