திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் ஆட்டோ பயணிகளை ஏற்றிச் செல்வதில் திருநங்கைகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், 10க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் சில ஆட்டோ ஓட்டுநர்களும் பேருந்து நிலையம் அருகே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.