திண்டுக்கல்: 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலக வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டன. ஆட்சியர் சரவணன் தலைமையில், அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வைப்பறை பாதுகாப்பாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.