தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் மோசடி

2பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில் உள்ள கிளை தபால் நிலையத்தில், ஊழியர் முனியாண்டி என்பவர் பொதுமக்களின் சேமிப்புப் பணம் ரூபாய் 52 லட்சத்தை கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில், முனியாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அரசின் செல்வமகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்கள், தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி 50க்கும் மேற்பட்டோர் கிராம அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வத்தலகுண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி