திண்டுக்கல் GTN கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் NCC மாணவர்களுக்கான B சான்றிதழ் எழுத்துத் தேர்வு, 8-வது தமிழ்நாடு பட்டாலியன் ஆபீசர் கமாண்டிங் கர்னல் சேது மாதவன் தலைமையில் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 10 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 227 NCC மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். இந்தத் தேர்வு மாணவர்களின் இராணுவப் பயிற்சி மற்றும் அறிவை மதிப்பிடும் வகையில் நடைபெற்றது.