திண்டுக்கல் ஒய். எம். ஆர். பட்டி காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று பால்குடம் சுமந்து சென்றனர். மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து தொடங்கிய இந்த பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காளியம்மன் கோவிலை அடைந்தது.