திண்டுக்கல்லில், குடிபோதையில் இருந்த முகமது சுலைமான் என்பவர், ராஜேந்திரன் என்ற முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து முதியவர் அளித்த புகாரின் பேரில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்க பாண்டியன் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி, முகமது சுலைமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.