திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, குரும்பபட்டி சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற காளிமுத்து (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உபயோகத்திற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் காளிமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.