திண்டுக்கல் நகர் DSP கார்த்திக் உத்தரவின் பேரில், நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில், சார்பு ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் நந்தவனம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த பேகம்பூர், யூசுப்பியா நகரைச் சேர்ந்த லத்தீப்மௌலானாவை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர் போலீசாரை அசிங்கமாகப் பேசி, பட்டாக்கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். உடனடியாக போலீசார் லத்தீப்மௌலானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.