திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி. சங்கர் உத்தரவின் பேரில், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அஞ்சலி ரவுண்டானா அருகே அங்குவிலாஸ் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முருகேசன் மகன் பம்பாவாசன் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.