வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள ஒர்க் ஷாப்பில்
வேலை செய்து வந்த பாண்டியராஜனை, குடிபோதையில் சூரிய பிரகாஷ் என்பவர் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளார். பாண்டியராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சூரிய பிரகாஷை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.