திண்டுக்கல்: கஞ்சாவுடன் வாலிபர் கைது

981பார்த்தது
திண்டுக்கல்: கஞ்சாவுடன் வாலிபர் கைது
திண்டுக்கல் திருச்சி ரோடு கல்லறை தோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜயகுமார்(28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியின் போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். YMR-பட்டியை சேர்ந்த விஜயகுமாரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி