
கொடூர கொலை -கோர்ட் அதிரடி தீர்ப்பு!
திண்டுக்கல் இரெண்டல பாறையில் 2021-ம் ஆண்டு குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவர் மிஸ்பா ஐசக் நியூட்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போலீசாரின் தீவிர முயற்சியால் மிஸ்பா ஐசக் நியூட்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



































