முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 வாலிபர்கள் கைது

1பார்த்தது
முதியவரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் கடைக்குச் சென்றுகொண்டிருந்த ரத்தினபோஸ்(65) என்பவரை, தளபதி(27) மற்றும் பிரவீன்லியாஸ்(22) ஆகிய இருவர் ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதுகுறித்து ரத்தினபோஸ் கேட்டபோது, இருவரும் அவரை ஆபாசமாகப் பேசி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி, குற்றவாளிகளான தளபதி, பிரவீன்லியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி