தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகேயுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்து, புனித தீர்த்தக்குடங்களுடன் சந்தன கருப்பு கோவிலில் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து மேளதாளம் முழங்க, வர்ணக் குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர்.