திம்மனநல்லூர் ஊராட்சி பள்ளபட்டியில் வசிக்கும் சுப்பம்மாள் (30) வீட்டில் இன்று சாரை பாம்பு புகுந்தது. அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அண்டாவிற்குள் இருந்த ஐந்து அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.