சிறப்பு வாக்காளர் பட்டியல்(SIR) குறித்து விழிப்புணர்வு பேரணி

0பார்த்தது
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை தாசில்தார் ஆறுமுகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணி நத்தம் அவுட்டரில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக யூனியன் அலுவலகம் வரை சென்றடைந்தது.

தொடர்புடைய செய்தி