கோவை வடவள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (62) தனது சகோதரருடன் புதன்கிழமை பழனிக்கு காரில் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பும்போது, பழனியை அடுத்த பொள்ளாச்சி-திண்டுக்கல் புறவழிச் சாலையில் கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீரனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.