சாலையின் மையத் தடுப்புச் சுவரில் கார் விபத்து - 2 பேர் காயம்

0பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டியயில் சனிக்கிழமை இரவு கார் சாலை மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கரூர் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் (42) மற்றும் அவரது மகன் குகன் (12) ஆகியோர் காரில் உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதியதில் தந்தை, மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி