திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூதகுடி கிராமத்தில், கார் ஒன்று பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பைக்கில் பயணித்த மதுரை மேலூரைச் சேர்ந்த தாய் மீனா (43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் சரவணபாண்டி (20) படுகாயமடைந்து, நத்தம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.