திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஆர்.வி.என். கண்ணன் ஏற்பாட்டில், கழக துணை பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, உரிய வாக்காளர்களை சேர்த்து, போலி வாக்காளர்களை நீக்கினால் கழகம் நூறு சதவீதம் வெற்றி பெறும் என்றும் அவர் பேசினார். நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், முன்னாள் எம்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.