திண்டுக்கல்: கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை; 2 பேர் கைது

82பார்த்தது
திண்டுக்கல்: கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை; 2 பேர் கைது
திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது மேட்டூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நந்தவனப்பட்டி சேர்ந்த முத்துசாமி என்பவரையும் சிறுமலை புதூர் பகுதியில் மதுபானம் விற்பனை செய்த பிரான்சிஸ் என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 52 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you