திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே, குடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த கருப்பசாமி, பின்னர் தேசிய நெடுஞ்சாலை மேம்பால அணுகு சாலையில் அட்டகாசம் செய்ததால் கைது செய்யப்பட்டார். வேங்கனூர், S. K. நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, டாஸ்மார்க் கடை அருகே ரோந்து சென்ற போலீசாரிடம் தன்னை வீட்டில் விடுமாறு தகராறு செய்தார். பின்னர் அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பால அணுகு சாலையில் அவர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.