வீட்டிற்கு செல்ல விடாமல் மூதாட்டியை மீது தாக்குதல்

1பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி ஊராட்சி புதூர் கெச்சேயினிபட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெருமாள் அம்மாள், தனது நிலத்தையும் வீட்டையும் அபகரிக்க முயன்ற உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஏற்கனவே அவரது உறவினர்கள் கோபால் மற்றும் சரவணன் ஆகியோர் அவரது இரு மகன்களையும் அடித்து விரட்டிவிட்டதாகவும், 30 வருடங்களாக குடியிருந்த இடத்தை அபகரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும், உறவினர்கள் மிரட்டுவதால் இரு தினங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், நீதிமன்றத்திலும் தங்கியிருந்த பெருமாள் அம்மாள், இன்று காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.