மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

2பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி வேலாம்பட்டி மீனாட்சிபுரம் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை உறவினர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்தின் வாரிசுகளான காசி மற்றும் பாண்டியன் ஆகியோரின் பெயர்களை மறைத்து, செல்வக்குமார் என்பவர் போலியான வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தை தனது பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி