எரியோடு: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

52பார்த்தது
எரியோடு: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
திண்டுக்கல் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளிக்குச் சென்று மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வழியில் தங்கராஜ் (65) என்ற முதியவர் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனைக் கவனித்த பள்ளி ஆசிரியர் மாணவனை அன்புடன் அழைத்துப் பேசி விசாரணை மேற்கொண்ட போது இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி