கோர விபத்து பால்வேன் ஓட்டுநர் வண்டிக்குள்ளேயே பலி

1பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து அருகே பாத்திமா நகரைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டோ (42), அமிர்தா பால் நிறுவனத்தின் மினி வேனில் பால் ஏற்றிக்கொண்டு மேலூர் அருகே சேக்கிபட்டிக்கு பாலை இறக்கிவிட்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். நத்தம் அப்பாஸ்புரம் அருகே வந்தபோது, சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் ஜார்ஜ் பெர்னாண்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்-கொட்டாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களால் இதுவரை 100க்கும் மேற்பட்ட விபத்துகளும் 25க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி