திண்டுக்கல், தோட்டனூத்து, புளியம்பட்டியைச் சேர்ந்த பேபி(28) என்பவர், கோவை ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்தபோது, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த காவலர் வீரமணியுடன் பேபிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். ஆனால், வீரமணி திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை கடந்த மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டதால், மன உளைச்சலில் பேபி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காவலர் வீரமணியைக் கைது செய்தனர்.