நத்தம்: கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

1821பார்த்தது
நத்தம்: கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டி அருகே 72 வயதான வையாபுரி, நேற்று தனது வீட்டின் அருகே இருந்த தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். பின்னர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி