பணம், பயணிகளின் செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்

5பார்த்தது
பணம், பயணிகளின் செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் மீது குண்டாஸ்
திண்டுக்கல் அருகே மினி பஸ்சை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து கண்டக்டரின் பணப்பை மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 7 பேர் கொண்ட கும்பலை தாலுகா போலீசார் கைது செய்தனர். இதில் யுவராஜ் மற்றும் ராஜ் (எ) ராசு ஆகிய இருவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, எஸ்.பி. பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டதை அடுத்து, யுவராஜ் மற்றும் ராசு ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.