திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள சிறுமலை, கொடைக்கானலுக்கு நிகரான சீதோஷ்ண நிலை கொண்ட பகுதியாகும். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சிறுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.