தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கருங்கல் ஊராட்சி
கே. ஆனைப்பட்டியில், பால் விலையை உயர்த்தி வழங்க கோரி, அங்குள்ள பால் கூட்டுறவு சொசைட்டி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காசிமாயன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
கரவை மாடுகளுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தற்போது வழங்கப்படும் பசும்பால் லிட்டர் ரூ. 32, எருமைப்பால் லிட்டர்
ரூ. 42, என்பது கட்டுபடியாகாததால்,
ஒரு லிட்டர் பாலுக்கு
ரூ. 10 உயர்த்தி வழங்க வேண்டும், கலப்புத்தீவனங்களை 50% மானியத்தில் வழங்க வேண்டும், ஆவின் முறைகேடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜரத்தினம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய தலைவர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.