திண்டுக்கல் அடுத்துள்ள வாழக்காய் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகர், முருகன் திருக்கோவிலில் புனர்வர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி புனித தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்தலுடன் துவங்கிய விழா, முதல்கால யாக பூஜை, கணபதி பூஜையுடன் தொடர்ந்தது. 22ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து, யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, நன்மங்கள இசை, தேவாரம், திருவாசகம், கந்தபுராணம் ஆகியவை ஓதுவார்களால் இசைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. இறுதியாக நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.