தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களுக்கும் ஏற்ப சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 75 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திண்டுக்கல், நத்தம் அருகே மதுரை-நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதூர் சுங்கச்சாவடியில் இன்று (ஏப். 1) முதல் இந்த கட்டண உயர்வு அமலாகிறது.