திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டியில் பொன்னம்மாள் (75) என்ற மூதாட்டி தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் இருந்த உடல். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் நத்தம் காவல் நிலையம் போலீஸ் அனைத்து தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் காவல் நிலைய போலீசார் தற்கொலையா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடமாட்டாரா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.