நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரியும் முருகராஜ் (47) பிப்.24 இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் முத்தழகுபட்டியைச் சேர்ந்த ஜெபாஸ்டின் ஜான்சன்பிரபு (23) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.