கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

2பார்த்தது
கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தமிழ்நாடு கால்நடை, பராமரிப்புத் துறையினர் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். உடல்நலம் குன்றிய, காய்ச்சல், இருமல், சளி, தோல் நோய்கள், புண்கள், சுவாசக் குறைவு உள்ள குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக் கூடாது. நோய் உள்ள குதிரைகளை தனிமைப்படுத்த வேண்டும். குதிரை இருப்பிடங்கள், உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானலில் சுகாதார அலுவலர்கள் குதிரை நிறுத்தப் பகுதிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி