திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு புகைப்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், தங்களைப் பற்றியும் புகைப்படத்தைப் பற்றியும் சிறு குறிப்புடன் மென் நகலை dikbookfair2025@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும், புகைப்படத்தை 15 x 12 அளவில் பிரிண்ட் எடுத்து, திண்டுக்கல் இலக்கிய களம், வெங்கடாசலம் அரங்கம், பிச்சாண்டி பில்டிங்ஸ், தலைமை அஞ்சல் நிலையம் அருகில், திண்டுக்கல் 624 001 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என ஒருங்கிணைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.