வீரர்கள் பரிசோதனை நிலையத்தில் தள்ளுமுள்ளு

3பார்த்தது
வீரர்கள் பரிசோதனை நிலையத்தில் தள்ளுமுள்ளு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், மடூர், புகையிலைபட்டியில் உள்ள புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. வீரர்கள் பரிசோதனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி வீரர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி