திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை பதிவேடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், புதிய கட்டிடப் பணிகள், சமையலறை ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். சிகிச்சைக்காக வந்திருந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் நலம் விசாரித்த அமைச்சர், மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு வலியுறுத்தினார்.